My Blog List

Wednesday, February 22, 2012

எகிறும் விலை உயர்வால் பாதிக்கப்படும் மக்கள்.


இந்த பூமியில் கிடைக்கும் அரிய வளங்களை கொண்டே மனிதன் இன்று தனது அன்றாட வாழ்க்கை முறையினை வெகு சிறப்பாக மேற்கொண்டு வருகின்றான். மிக அத்தியவசியமான சில பொருட்கள் எல்லா இடமும் கிடைப்பதில்லை குறிப்பிட்ட பகுதிகளில் அதிகமாக கிடைக்கும். அந்தவகையில் மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளில் அதிகமாக காணப்படும் மசகு எண்ணை உலக இயக்கத்துக்கு மிக முக்கிய பங்கை பெறுகிறது.

அண்மை காலங்களில் மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படும் அமைதியின்னை பல்வேறு நாடுகளில் பொரும் தாக்கத்தை செலுத்துகின்றது. இதன் காரணத்தால் குறிப்பிட் சில தினங்களுக்கு முன் இலங்கையிலும் மசகு எண்ணைய் மூலம் பெறப்படும் அனைத்து எரிபொருட்களுக்கு சடுதியான விலை உயர்வினை உயர்த்தி இருந்தது. இதனால் இலங்கையில் அனைத்து மக்களும் பெரும் பாதிப்பினை எதிர் நோக்கினார். இவ்விலை உயர்வினை கண்டித்து பல்வேறு ஆர்ப்பாட்டங்களும், பல விமர்சனங்களும் இடம் பெற்றாலும் அரசாங்கம் அவற்றுக்கு செவி சாய்ப்பதாக இல்லை.

நாட்டின் எல்லாபகுதி மக்களும் இவ் விலைஉயர்வால் பாதிக்கப்பட்டாலும் பெரிதும் பாதிக்கப்படுவது. மலையக பெருந்தோட்ட மக்களே மலையகத்தில் மின்சார வசதியற்ற மக்களுக்கு 200 ரூபா மானியம் வழங்கி இருந்தாலும் இது தொடர்பாக டீடீஊ தமிழோசைக்கு கருத்து தெரிவித்த தேசிய தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் கே. வேலாயுதம் மின்சார வசதியற்ற குடும்பங்களுக்கு மட்டும் மாதத்திற்கு வழங்கப்படுகின்ற 200 ரூபாய் மானியம் இரண்டு லீற்றர் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு கூட போதுமானதல்ல, மலையகத்தில் மின்சார வசதியற்ற மண்ணெண்ணெய் விளக்கை நம்பியிருக்கின்ற குடும்பங்களுக்கும் சமையல் தேவைகளுக்காக மண்ணெண்ணெய் அடுப்பை நம்பியிருக்கி;ன்ற குடும்பங்களுக்கும் 200 ரூபா மானியம் உதவாது என்று கூறினார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் சர்வதேச சந்தையில் எண்ணைய் விலை கூட்டப்படவிலலை கூட்டப்பட்டு விடுமோ என்ற அச்சம் தோண்றுகின்றதே தவிர கூட்டப்பட விலலை. அப்படி கூட்டினாலும் ஒரு லீற்றருக்கு மண்ணெண்ணெய்க்கு 25 – 35 வரி அறிவிடப்படுகின்றது அதனையும் பார்க்கவேண்டும். அரசாங்கம் விண்விரயம் செய்து கொண்டு இருக்கின்றது என்று தெரிவித்தார். எவை எப்படியோ குறைந்த ஊதியத்தினை பெறும் தோட்டத்தொழில் மக்கள் இனிவரும் காலங்களில் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பை எதிர் நோக்க வேண்டி இருக:கும்.

நீண்ட தொரு உள்நாட்டு யுத்தத்துக்கு முகம் கொடுத்து தற்போது படிப்படியாக தமது இயல்ப வாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் வன்னி பொருநில பகுதி மக்களும் இவ்விலை உயர்வால் நொந்து நூலாகியுள்ளனர். வன்னியின் பெரும் பகுதிகளில் மேட்டு நீர்ப்பாசனத்தையே நம்பி விவசாயத்தினை மேற்கொண்டு வருகின்றனர் இவர்கள் தமது விவசாய நிலங்களுக்கு தண்ணீர் இறைக்கும் இயந்திரத்தின் உதவியுடனேயே நீர்ப்பாசனத்தினை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வளவு விலை கொடுத்து எரிபொருள் வேண்டி இறைத்து இலாபத்தினை பெறமுடியுமா என பலர் கேள்வி எழுப்பினர் 'பட்ட காலிலேயே படும்' என்பது போல எமக்கு விமோசனமே கிடைக்காத என பலர் ஆதங்கப்பட்டனர்.

இலங்கை வாழ் மீனவ மக்கள் இவ் விலை உயர்வால் பெரும் நெருக்கடியினை முகம் கொடுத்துள்ளார்கள். இவ்விலை உயர்வு தாம் செய்யும் தொழிலில் இலாபத்தினை பெற முடியாது. உடனடியாக விலையினை குறைக்கவும் அல்லது தமக்கு மானிய அடிப்படையில் எரிபொருள் வழங்குமாறு பல ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்ட போது உயிர்கள் பறிக்கப்பட்டதே தவிர முன்னேற்றகரமாக எதுவும் நடந்ததாக தெரியவில்லை.

விலை உயர்த்தப்பட்ட போதும் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும், வீதிகளிலும் வாகணங்களுக்கு குறைவே இல்லை வழமைபோல் இயங்கிக்கொண்டு தான் இருக்கின்றது. படிப்படியாக ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐம்பது சதம் என விலையினை உயர்த்தி வந்த அரசு அண்மையில் உயர்திய இந்த அதிக அளவிலான விலை உயர்வு இத்துடன் முடிவடைய போவதில்லை இனிவரும் காலங்களில் யுத்த காலத்தில் வன்னிமக்கள் எரிபொருளுக்கு எவ்வகை கஸ்ரத்தினை எதிர் கொண்டார்களோ அதனைவிட இனிவரும் காலங்களில் இந் நாட்டு மக்கள் அனைவரும் எதிர் நோக்க வேண்டி வரும் என்பது திண்ணம்.

No comments:

Post a Comment