My Blog List

Thursday, February 14, 2013

'பூதம் அடுக்கிய கல்'



கிராமங்கள் எல்லாவற்றிலும் ஏதோ ஒரு சிறப்பம்சத்தினை தன்னகத்தே கொண்டிருக்கும். இவை பலராலும் அறியப்படாவிட்டாலும். அக்கிராம மக்கள் தமது கிராமத்தின் அதிசயமான ஒருவிடயமாகவும் உலக அதிசயத்துக்கு அடுத்ததாக இதுதான் பெரியது என எண்ணிப் பெருமைப்படுகின்றர்.

வன்னியில் விவசாயத்துக்கு பெயர்போன ஒரு செழிப்பு மிகு அழகிய கிராமம் தான் முத்துஐயன்கட்டு. இக்கிராமத்துக்கு அழகு சேர்;ப்பது முத்துஐயன்கட்டு குளமும், முத்துஐயன்கட்டு கிராமத்தினை ஊடறுத்து பாய்யும் பேராறும,; இக்கிராமத்தின் அழகுக்கு மெருகூட்டுகின்றது. இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற் போல அமைந்து தான் 'பூதம் அடுக்கிய கல்' என்று சொல்லப்படும் அதிசய இடம். 
பூதம் அடுக்கிய கல்

பூதம் அடுக்கிய கல் என்பது பாரிய கருங்கல் துண்டுகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி ஓர் அணையாகவோ அல்லது மதிலாகவோ போடப்பட்டுள்ளது. இதன் அருகில் பேராறு ஓடுகின்றது. இவ் ஆற்றின் நீரரிப்பினைத் தடுக்கவும் அல்லது வெள்ளப் பெருக்கு காலங்களில் காட்டாற்று வெள்ளம் ஊருக்குள் செல்லாத வண்ணம் பாதுகாப்பு அரணாக செயற்பட்டுவருகின்றது எனலாம்.

இதன் சிறப்பு என்னவென்றால்  இன்று பாரிய இயந்திரங்களின் உதவியுடனே பாரிய கற்களை அடுக்க முடியும் பல நூற்றாண்டுக்கு முன்பு மனிதனால் இந்த காரியத்தினை செய்திருக்க முடியாது. இதனை பூதமே அடுக்கியிருக்க முடியும் என இக்கிராம மக்கள் நம்புகின்றனர். இவர்கள் இவ்வாறு எண்ணுவதற்கும் ஒரு காரணம் உண்டு முத்துஐயன்கட்டு குளத்தினையும் பூதம் தான் வெட்டியது என்ற ஒரு பழைமையான கதையும் உண்டு. 
பூதம் அடுக்கிய கல்
இருநூறு மீற்றருக்கு அதிகமான பகுதிக்கு அடுக்கப்பட்டிருந்த இந்த கற்கள் இன்று வேறு தேவைகளுக்காக சில விஷமிகளால் உடைத்து திருடப்பட்டு வருகின்றது. இதனால் வெள்ள நேரத்;தில் ஆற்றுநீர் குடிமனைகளுக்குள் புகுந்து பெரும் அழிவை ஏற்;படுத்துகின்றது. 

இதனை தமது கிராமத்தின் அதிசயமாக பார்க்கும் இந்த பூதம் அடுக்கிய கல் பற்றி முத்துஐயன்கட்டு கிராமத்தில் வசிக்கும் நபர் ஒருவரிடம் கேட்டபோது 'நான் அறிந்த காலத்தில் இருந்து இக்கல் இருக்கின்றது. எமது முன்னோர்கள் ஆற்று நீர் காணிகளுக்கு வராதபடி செய்திருக்கின்றார்கள். இதனை தற்போது எமது கிராமத்துக்கு  வரும் அனைவரும் பர்ர்வையிட தவறுவதில்லை. அதுமட்டுமன்றி அயல் கிராம பாடசாலை மாணவர்களும் வந்து பார்த்துவிட்டு ஆச்சரியத்துடன் செல்கின்றனர்.  இதனை பேணிப்பாதுகாக்கும் போது இதன் தொன்மையினை நாட்டில்உள்ள அனைத்து மக்களும் பார்க்க முடியும்' என்றார். 

இவ்வாறு ஒரு கிராமத்தின் சின்னம் மட்டுமல்ல. தமிழர்;களின் பாரம்பரிய வரலாற்றை பறைசாற்றும் சின்னமாகவே இவ் பூதம்  அடுக்கிய கல் திகழ்கின்றது. இது ஒரு தொல்பொருள் சின்னமாக பாதுகாக்க வேண்டிய நிலையில் உரியவர்கள் கவனிப்பார்அற்ற நிலையில் இதன் சிறப்பை இழந்து நிற்கின்றது. இதனை குறுகிய நோக்கத்துடன் சில விஷமிகள் அழித்து வருகின்றனர். 

எழுத்து :- கா.கணேசதாசன்.

No comments:

Post a Comment