My Blog List

Tuesday, July 12, 2011

அழிவை எதிர்நோக்கியுள்ள பழம்பெரும் பத்மாலயம்.



கட்டடங்கள் மனித உழைப்பின் சாரமாய் திகழ்பவை. நூற்றுக்கணக்கான ஆயுளை அவை கொண்டுள்ளன. இருந்தபோதிலும் யுத்தங்களும், இயற்கை பேரிடர்களும், அபிவிருத்திப்பணிகளும் அவற்றை அழித்துள்ளன. இருப்பினும்  அவற்றையும் தாண்டி சில உரம்பெற்ற கட்டப்பகுதிகள் சில நிமிர்ந்து நிற்பதையே இப் ஒளிப்படம் பிரதிபலிக்கிறது.
யாழ்ப்பாண நகரப்பகுதியின் பருத்தித்துறை வீதியில், வேம்படிச்சந்திக்கு அருகாமையில் தமிழர்களின் கட்டக்கலையின் சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக 1908இல் கட்டப்பட்டதே "பத்மாலயம்" ஆகும். இதன் பெரும்பகுதிகள் யுத்தத்தினால் அழிவடைந்த போதிலும் இதன் முன்பகுதி மட்டும் இன்றும் மிஞ்சிநிற்கிறது. யாழ்ப்பாணக்குடாநாட்டில் செயற்படுத்தப்பட்டுவரும் வீதி அகலிப்பால் இதுவும் இல்லாது போய்விடும்.

No comments:

Post a Comment