My Blog List

Wednesday, April 20, 2011

அங்காடித்தெரு திரைப்படம்

தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் காலத்துக்கு காலம் பல்வேறுபட்ட திரைப்படங்கள் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் சில படங்களே மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளை யதார்த்தபூர்வமாக சொல்லி மாபெரும் வெற்றியடைகின்றது. அந்தவகையில் சென்ற ஆண்டு வெளிவந்து அனைத்து தமிழ்திரைப்பட ரசிக உள்ளங்களை கொள்ளைகொண்ட ஓர் அற்புதமான திரைப்படம் தான் இந்த அங்காடித்தெரு.


தமிழகத்தின் பின்தங்கிய வறியகுடும்பத்தில் பிறந்த ஓர் இளைஞன், அவனது தந்தையார் விபத்தில் இறந்து விடுகின்றார். குடும்பவறுமையால் மேற்கொண்டு படிக்க முடியாமல் போக தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக சென்னையில் உள்ள பிரபல புடைவைக்கடை ஒன்றுக்கு வேலைக்கு செல்கிறான். இவ்வாறு நகரப்புறங்களுக்கு வேலைதேடிச்செல்லும் இளைஞர்கள் நகரசுரண்டல் முதலாளி வர்க்கதினர்களால் எவ்வாறு இருபத்திநான்கு மணிநேரமும் வேலைவாங்குகிறார்கள் என்பதையினையும். அவர்களின் உணர்வுகளுக்கு போடப்படும் பெரும் தடைகள். இவ்வாறு அடிமைகள் போல் நடத்தப்படும் அவர்களின் வாழ்க்கையினை மிகவும் ஒரு தத்துருவமான முறையில் பிரபல இயக்குனர் வசந்தபாலன் சொல்லியுள்ளார்.

திரைப்படம் ஆரம்பத்தில் இருந்து முடிவுவரை கட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதிக மக்களின் நடமாட்டம், குப்பபையும் கூழமுமான சேரிப்புறப்பமான காட்சியின் பின்புறங்கள் கதைக்கு உயிருட்டாமாக காணப்படுகிறது. ஒவ்வொரு கட்சியமைப்பிலும் நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சிகளாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அண்ணன் வேலை செய்யும் கடை பையைக்கண்ட தங்கை ஒடிச்சென்று அந்த பையை வைத்திருப்பவர்களிடம் அதைக்கேட்பது, நான் உன்னைக்காதலிக்கவில்லை என்று கூறியதுடன் அவள் விழுந்து தற்கொலைசெய்து கொள்வது என பல காட்சிகளில் நெஞ்சு நெகிழ்கிறது.
வீதியோர மக்களின் வியாபார முறைகளையும் சுவைபட சொல்லியுள்ளார். கண்தெரியாதவரும் ஒரு தொழில் செய்வது. மலசலகூடத்தில் பணிபுரிகின்றவர்கள். பேன்றோரின் வாழ்க்கை முறையினை தெளிவாக குறியிருப்பதன் ஊடாக அனைவராலும் வாழலாம் என்ற எண்ணக்கருவை இயக்குனர் சொல்லியிருக்கிறார்.

தமது கடையில் வேலைபார்கிறவர்கள் காதல், கல்யாணம் போன்றவற்றில் ஈடுபட்டால் அக்கறை இருக்காது என்பதால் அங்கு காதல் மறுக்கப்படுகிறது. அப்படி இருக்கின்ற போது நாயகனும் நாயகியும் காதலிக்கினறர்கள். அவர்களின் காதலுக்கு முதலாளியிடம் இருந்தே எதிர்ப்பு வருகிறது. அதை மீறி காதலர்கள் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் உங்கள் முன்னிலையில் வாழ்ந்து காட்டுவோம் என்ற சபதத்துடன் செல்கின்றார்கள். பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்ற சொல்லுக்கு அமைய விபத்து ஒன்றில் நாயகி தனது கால்கள் இரண்டையும் இழக்கின்றாள். அதன்பின்பும் நாயகன்அவளைத் திருமணம் செய்கிறான். அவர்கள் இருவரும் வீதியோர வியாபரத்தில் ஈடுபடுகின்றர்கள். இவ்வாறு திரைப்படத்தை இயக்குனர் சுவைபட இலக்கிய நயத்துடன் எடுத்துள்ளார்.


படத்தில் இடையிடையே தனியார் கடையொன்றில் பணிபுரியும் பெண்கள் அனுபவிக்கும் துன்பங்களை தத்துருவமாக தெரிவித்துள்ளார். குறிப்பாக சீட்டுக்குழுக்கியது தப்பென்று நாயகி அஞ்சலியை மூடிய அறைக்குள் கூட்டிச்சென்று வில்லன் செய்யும் துன்பங்களை உண்மையாக சொல்லி இருக்கின்றனர்.
அறிமுக நாயகனாக வரும் மகேஷ; மற்றும் கற்றது தமிழ் அஞ்சலி மற்றும் துணைநடிகர்களின் நடிப்பில் யதார்த்தம் தெரிகிறது. ஜி.வி.பிரகாஷ;, விஜய்அன்ரனியின் இசையில் வந்துள்ள பாடல்கள் அனைததும் படத்தில் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்துள்ளது. குறிப்பாக 'அப்படி யொன்றும் அழகில்லை...'  ஜெயமோகனின் வசனம் உயிர்த்துடிப்புடையதாக காணப்படுகிறது.

இயக்குனர் - வசந்தபாலன்
இசை - ஜி.வி.பிரகாஷ;, விஜய்அன்ரனி
பாடல் வரி - நா.முத்துக்குமார்
வசனம் - ஜெயமோகன்
நாயகன் - மகேஷ;
நாயகி - அஞ்சலி
வில்லன் - இயக்குனர் வெங்கடேஷ;
முதலாளி - பழ. கருப்பையா
நண்பன் - பிளாக் பாண்டி



No comments:

Post a Comment