My Blog List

Tuesday, January 24, 2012

வேலுரில் ஓர் மாலைப்பொழுது.


வேலூர்க் கோட்டை

        தென்னிந்தியாவில் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரங்களும் கிராமங்களும் இருக்கின்றன. ஆவ்வரலாற்று சிறப்புக்களை நாம் பாடப்புத்தகங்களிலும், திரைப்டங்களில் பார்த்திந்தோம். அத்தகய வரலாற்று சிறப்பு மிக்க ஓர் நகரம் தான் வேலூராகும். இவ் வேலூர் நகரத்துக்கும். சென்று நான் அதிசயித்து நின்ற இடங்கள் பற்றி பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

 வேலூர்க் கோட்டை

          கடந்த மாதம் யாழ்ப்பாணப்பல்கலைகழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் ஏற்பாட்டில் ஊடக கற்கை நெறியினை பயின்று வரும் மாணவர்கள் தெனினிந்திய கல்விச்சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு ஊடகவியலாளர்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு பல வலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களை பார்த்தோம் அதில் எனக்கு வியப்பபை ஏற்படுத்திய இடம் தான் வேலூர்.

          சுற்றுலாபயணிகளை பெரிதும் கவர்ந்திருக்கும் வகையில் வேலூரின் நடுவே அமைந்துள்ள கோட்டை கி.பி16 நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் விஜயநகரப்பபோரரசின் சதாசிவ தேவ மகாராஜரின கீழ் பணிபுரிந்த சின்ன பொம்மி நாயக்கரால் நிறுவப்பட்டது. விஜயநகரப் பேரரசு இஸ்லாமிய பேரரசர், மராட்டிய பேரரசு, ஆங்கிலேயேப் பேரரசுடன் பல்வேறு காலகட்டங்களில் தொடர்புடைய வரலாற்றுப்புகழ் பெற்ற கோட்டையாக இருந்து வந்துள்ளது. 
ஜலகண்டஈஸ்வரர் ஆலய சிற்பம்

      ஆங்கிலேயர் இக் கோட்டையினை கைப்போற்றிய போது,  ஸ்ரீரங்கப்பட்டன வீழ்ச்சிக்குப் பிறகு திப்பு சுல்தானின் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டு இக் கோட்டையில் உள்ள திப்பு மகாலில் அடைக்கப்பட்டனர். இந்திய சுகந்திரத்திற்கு வித்திட்ட 1806ம் ஆண்டு நடைபெற்ற முதல் சிற்பாய்க்கலகம் இங்கு ஏற்ப்டடது. ஆங்கிலேயரை எதிர்த்து கண்டியை ஆண்ட மன்னன் விக்ரமராஜசிங்கே இக் கோட்டையின் உள்ள கண்டி மகாலில் சிறை வைக்கப்பட்டான். ஆகியவை வேலூர் கோட்டையின் சிறப்புகளாகும்.

            இவ்வாறு பல சிறப்புக்கைளை கொண்ட இல்வேலூர் கோட்டையினை நேரில் சென்று பார்த்த போது வியப்பாகவே இருந்தது. இதன் அமைப்பானது சுற்றி அகழி காண்ப்படுகின்றது, கோடடை சுவரானது பெரும் விசாலமானதாகவும் அதன் மேல் பல கண்காணிப்பு இடங்களும காணப்படுகின்றது. முற்றுலும் இக்கோட்டையானது கருங்கல்லினை கொண்டே கட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இக்கோட்டைக்குள் சைவ ஆலயம், கிருஸ்த்தவ ஆலயம், மசூதி போன்று மூன்று கோயில்களும்அமைக்கப்ட்டிருக்கின்றது. 

     ஆனால் சைவ கோயிலான ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில் கலையம்சத்துடன் கூடிய சிற்பவேலைப்பாடுகள் நிறைந்த ஓர் ஆலயமாகும்.
இத்தலத்து சிவன் புத்ம விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். சிவன் சன்னதியின் பின்புறம் திருப்பதி அமைப்பில் வெங்கடேசப்பெருமான் காட்சி தருகிறார். இக்கோயிலில் கலையம்ச திருமண மண்டபம் வருவர்களை கொள்ளை கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.

      பொம்மி சிவனுக்கு கோயில் எழுப்பிய போது சுற்றிலும் ஒரு பிரமாண்டமான கோட்டையைச் கட்டினார். கோட்டையைச் சுற்றி தண்ணீர் நிறைந்த பெரிய அகழி இருக்கிறது. பிரகாரத்தில் கலை அழகு மிளிரும் கல்யான மண்டபம் இருக்கிறது. இந்த இந்த மண்டபத்தில் வித்தியசமான பல சிற்பங்கள்வழிக்கடிப்ட்டிருக்கிறது. 

          வெண்ணெய் பானையுடன் கிருஸ்ணர், பைரவர். நடராஜர், சரபேஸ்வரர், சிவமுர்ததஙகள், கண்ணப்பர் வரலாறு, நரசிம்மனின் பாதம் அரிகல் வணங்கியபடி கருடழ்வார், மத்தளம் வாசிக்கும் பெருமாள், மகரிஷி யோகாசனம் செய்யும் சிற்பம், மேல்வதானத்தை தாங்கும் கிளிகள் என கண்னைக்கவரும் பல விதமான சிற்பங்கள் இருக்கின்றது. 

        இந்த மண்டபத்தின் அழகில் வசித்த வெள்ளையர் தளபதி ஒருவர் துண்களோடு பெயர்த்திச் செல்ல விருமபினார். இதற்காக வெளிநாட்டிலிருந்து கப்பலை வரவழைத்தார் அனால் அக்கப்பல் வழியிலேயே விபத்தைச் சந்தித்ததால் இத்திட்டம் கைவிட்டார். இவ்வாறு இக்கோயிலின் சிறபஙகளை பார்க்கும் போது அதனை எம்நாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் என எண்ணம் தோண்றும் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.

இவ்வாறு வேலூர் தமிழர்களின் காதல், வீரம், பக்தி, கலாச்சாரத்துடன் பின்னிப்பினைற்து ஓர் வியயப்புக்குரிய இடமாகவே இன்றும் திகழ்கின்றது.

படங்கள்- இணையம்.

No comments:

Post a Comment