My Blog List

Sunday, April 17, 2011

சொர்க்கத்தின் குழந்தைகள்' (Children of Heaven)


சொர்க்கத்தின் குழந்தைகள்' வழமையாக தமிழ்ப்படங்களை பார்த்துப்பார்த்து அலுத்துப்போன எங்களுக்கு இப்படியெல்லாம் படம் இருக்கிறதா என எண்ணத்தோண்றிய ஈரானிய நாட்டு பெர்சியன் மொழிப்படம்தான் இது ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் தத்துருவமாக செலுக்கி உள்ளர் பட இயக்குனர். அத்துடன் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் அனைவரும் உயிர்த்துடிப்புள்ள படமாக உருவாக்கி உள்ளனர்.[Image]
படத்தில் வறுமை, நேர்மை, பாசம், கோபம், வெறுப்பு, பொறுமை, தியாகம் என பலவிதமான உணர்வுகளுடன் எந்தவிதமான ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஓர் நேர்கோட்டில் பயணம் செய்துள்ள அருமையான படம்.
தனது தங்கையின் சூ வைத்தொலைத்து விடுகின்றான் அலி. வீட்டின் வறுமையினை உணர்ந்து பெற்றோரிடம் தெரிவிக்காமல் அண்ணனும் தங்கையும் ஒரு சூ வைமாற்றி மாற்றி போடுகிறார்கள். தங்கை தனக்கு பாடசாலை முடிந்தவுடன் ஓடோடிப்போய் அண்ணனுக்கு சூ வைக்கொடுக்கும் காட்சியும், ஒரு நாள் ஓடி வரும்போது சாக்கடை வாய்களுக்குள் ஒற்றைக்கால் சூ விழுந்து விடும் போது அதை எடுப்;பதற்கு அலியின் தங்கை ஒடும் காட்சி பார்ப்பவர்களை மனமுருக வைத்துள்ளது.
அலி தனது தந்தையுடன் Nவைக்கு செல்லும் காட்சி தத்துருவமாக படமெடுக்கப்பட்டுள்ளது. வீடுவீடாக போய் வேலை கேட்பதும் ஒரு வீட்டுக்கு செல்லும் போது நாய் துரத்துவதும், தந்தையின் சைக்கிலுடன் வீழ்வதும், என வரும் காட்சிகள் உயிர் துடிப்புடையாதாக அமைவதுடன் வறுமையில் கொடுமை வறுமையே என்பதை தத்துருவமாக சொல்லப்பட்டுள்ளது.
தனக்கு கிடைத்த பேனாவை தங்கைக்கு கொடுப்பதில் இருந்து அலி தங்கை மேல் வைத்துள்ள பாசம் புலப்படுகிறது. தங்கை அண்ணனுக்கு  வேளைக்கு சூ வைக்கொடுக்க வேண்டும் என்பதற்காக பாடசாலை முடிந்தவுடன் வேகமாக ஓடிவருவது அவள் அண்ணன் மீது வைத்த பாசம் வெளிப்படுகிறது.[Image]
படம் எடுக்கப்பட்ட விதம் உண்மையில் பாரட்டப்பட வேண்டிய ஒன்று எனெனில் ஒவ்வொரு காட்சியும் படமாக்கப்பட்ட விதம் அருமையிலும் அருமை. அதிலும் சூ வைக்கொடுப்பதற்கா ஓடும் இடங்களை அருமையா படமெடுக்கப்பட்டுள்ளது.
அலியும் தந்தையும் வேலைக்கு செல்லும் போது நாடு எவ்வளவோ முன்னேறிவிட்டது. குறிப்பாக மாடிவிடுகள். அதிநவின கார்கள் என நாட்டில் மக்கள் வசதியாக வாழ்ந்தாலும் இவ்வாறு வறுமைப்பட்ட மக்களும் இருக்கிறார்கள் என்பதை குறியீடாக சொல்லியுள்ளது. இத்திரைப்படம்.
[Image]
இறுதிகட்டதில் மரதன் போட்டி ஒன்று நடைபெறுகின்றது. அதில் மூன்றாவது பரிசு சூ அதனை இலக்காக கொண்டு போட்டியில் கலந்து கொள்க்pன்றான் அலி. அதில் முதலாவதாக வருகின்றான். போட்டி முடிந்து மயங்கிய அவனை ஆசிரியர் தெளிவுபடுத்தியவுடன் 'சார் நான் மூன்றாவதா வந்துட்டேனா?' என கேட்கும் காட்சியும் கல் நெஞ்சுக்காரர்களையும் கரையவைக்கும் உருக்கமான காட்சி போட்டிகளில் கலந்து கொள்ளும் ஒவ்வொரும் முதலாவதாக வரவே அசைப்படுவார்கள் சூவுக்காக அவன் மூன்றாவதாக வர விரும்புகிறான். இவ்வாறு ஒவ்வொரு வறுமைப்பட்ட சிறுவர்களும் ஒவ்வொரு அசைகளை அடைவதற்காக பெரும் துன்பங்களையும், துயரங்களையும் சந்திக்கின்றனர். எல்லோரும் பார்க்க வேண்டிய அருமையான படம்.

No comments:

Post a Comment