My Blog List

Sunday, April 17, 2011

இரசாயன பாவனையும் அதன் தாக்கமும்

இயற்கை மனிதனுக்கு நண்பனாகவும், தோழனாகவும் இருந்த காலங்களில் மனிதன் தன்னிறைவு பொருளாதரத்துடன் வாழ்ந்தான். குறிப்பாக விவசாயிகள் பயிர்செய்கையில் நல்ல விளைச்சலை பெற்று அனைத்து சமுகத்தினருக்கும். போதிய உணவு கிடைக்கச் கூடிய வகையில் விளைச்சல் காணப்பட்டது. அக்கால காலங்களில் பொன்விளையும் புமியாகவே திகழ்ந்தது. காலப்போக்கில் அறிவியல் விருத்தி அடைய அடைய விவசாயத்துறையிலும் இயற்கை வளங்களை பயன்படுத்ததாது அதிக விளைச்சலை பெறும் குறுகிய நோக்கோடு புதிய புதிய இராசயனப் பொருட்களான கிருமிநாசினிகளையும், உரங்களையும் விவசாயிகள்  பயன்படுத்த தொடங்கினார். விளைச்சலை அதிகப்படுத்தினாலும். சூழலுக்கும் மனிதனுக்கும் நாளடைவில் எமனாகவே அமையப்பெற்றது எனின் மிகையாகது. 
[Image]
இன்று மனிதன் பயிரை விதைத்த காலத்தில் இருந்து அதனை அறுவடை செய்யும்  காலம் வரையான காலப்பகுகியில் இரசாயன கிருமி நாசினிகளையும் இரசாயன உரங்களையும் அதிகமாக பயன்படுத்துகின்றான். இவ்வாறு அதிகமான  உரப்பாவனையால் நிலம் உவர்தன்மை அடைகின்றது. பல ஹெக்ரயா் நிலப்பரப்பு இன்று பயிர் செய்கைக்கு உகந்தாக இல்லாமல்  தரிசுநிலங்களாக காணப்படுகின்றது.விவசாயின் நண்பன் என்று அழைக்கப்படும் மண்புழு இரசாயன உரப்பாவணையாலும், கிருமி நாசினிப்பாவனையாலும் இறந்து விடுகின்றன. அதனால் மண்புழுவால் விவசாயத்துக்கு செய்யப்படும் நன்மைகள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படுகின்றது. இதனால் உயிர்பல்வகைமை பெரிதும் பாதிக்கப்படுகின்றது.நெல்வயல்வெளிகளில் நெற்பயிருக்கு விடப்படும் நீர் கழிவுகவாய்கால் ஊடக கிளையாறுகளை சென்றடைந்து பின் பிரதான ஆற்ரை சென்றடைகின்றது. இவ்வாறு கடலை சென்றடைந்த நீர் பயிர் செய்கைக்கு பயன்படுத்திய இரசாயன உரம், கிருமி நாசினிகளின் நச்சுத்தன்மையை எடுத்தே சென்றுள்ளது.இதனால் ஆற்றுநீரும், கடல்நீரும் பாதிப்பதுடன் மீனினங்கள் இரசாயனத்தாக்கத்துக்கு உட்படுகின்றன. அந்த மீனை நாம் உண்ணும் போது எமக்கும் இரசாயன நச்சுக்களின் தாக்கம் எம்மை அடைகின்றது. இதனால் பாரிய நோய்களுக்கு உள்படவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படுகின்றது.இன்று நாம் எமது அன்றாட உணவுத் தேவையை புர்த்தி செய்வதற்கு சந்தைகளில் மரக்கறிகளை வேண்டுகின்றோம். இவை உற்பத்தி செய்யப்படும் இடங்களில் பயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய புழு, புச்சிகளில் இருந்து பாதுகாப்பதற்காக விவசாயிகள்  கிருமிநாசினிகளை அதிகமாக பயன்படுத்துகின்றான். சந்தையில் நல்ல விலைக்கு கொடுக்கக்கூடிய கறிவகைகள் மருந்தடிந்த அடுத்த நாளே சந்தைப்படுதும் போது. அதை நாம் வேண்டி உணவு சமைத்து சாப்பிடும் போது இரசாயன பொருட்களின்  தாக்கம் எமது உடலை உடனடியாகவே சென்றடைகின்றது. இதனால் வாந்தி, பேதி, உடற்சோர்வு, தலையிடி போன்ற நோய்கள் எம்மை உடன் தாக்குகின்றன. இவ்வாறு நச்சுத்தன்மை கலந்த உணவை தொடர்ந்து உண்பதால் காலப்போக்கில் உயிரழிவை ஏற்படுத்தக்கூடிய பாரிய நோய்களுக்கு உட்படுகின்றோம்.[Image]

விவசாயிகள் தமது பயிர் செய்கை நிலத்தை துப்பரவு செய்வதற்கு களைநாசினிகளான ரவுண்டப், பறக்குவாட் போன்றவற்றைப் பயன்படுத்துகின்றான். இவற்றால்  அப்பகுதியில் மருத்துவ குணம் கொண்ட களைகளும் அழிக்கப்படுகின்றது. இதனால் இன்று மனிதனுக்கு நன்மை விளைவிக்ககூடிய களைகளும் அழிக்கப்படுவதுடன். இவற்றின் இனப்பெருக்கம் பெரிதும் பாதிக்ப்படுகின்றது. இதனால் மருத்துவகுணம் கொண்ட களைகள் பல அழிந்து விட்டன, பல அழிந்து வருகின்றன.இவ்வாறு அதிகரித்து விட்ட இரசாயன பொருட்களின் பாவனையால் தாவரங்களுக்கு புதிய புதிய நோய்கள் ஏற்படுவதுடன்  சில தாவரங்கள் முற்றாக இப்புமியில் இருந்து அழிந்து விடுகின்றன. குறிப்பாக விவசாயிகள் தங்கள் ஆடுகள், மாடுகள், கோழிகளுக்கு உணவாகவும், வேலிகளுக்கு கதிகால்களாகவும் அதிகமானோரல் பயன்படுத்திவந்த முள்முருங்கை முற்றாக அழிந்துவிட்டது. இவ் முள்முருங்கையினை இன்று மருந்துக்கு கூட கண்ணால் காணமுடியாது உள்ளது. அவ் நோய் தாக்கத்தில் இருந்து அதனை பாதுகாக்கவும் யாரும் முன்வரவில்லை என்பது கவலைக்குரிய விடயமே.
[Image]
சில பறவைகளும், புச்சிகளும் விவசாயத்துக்கும் அதன் விளைச்சலுக்கும் ஒர் பாதுகாவலனாகவே அன்று தொட்டு காணப்படுகின்றுது. குறிப்பாக கொக்கு, மைனா, நாரை போன்ற பறவைகள் வயலிலும், தோட்டங்களிலும் உள்ள புழுக்களையும் புச்சிகளை உணவாக உட்கொள்கின்றன. இதனால் விவசாயத்துக்கு தீங்கு செய்யும் புழுக்குள் அழிக்கப்படுகின்றன. கிருமி நாசினிகள் அடிக்கப்படுகின்ற போது புச்சிகளும், புழுக்களும் இறக்கின்றன. நச்சுத்தன்மை காரணமாக இறந்த புழு, புச்சிகளை இப்பறவைகள் உண்பதால் அவையும். இறப்பதுடன் இவற்றின் இனப்பெருக்கமும் குறைகின்றது. இவற்றால் ஏற்படக்கூடிய நன்மைகள்  இன்று அடைய முடியாதுள்ளாது இன்று விவசாய பகுதிகளிலும் கொக்கு, மைனா, கிளி போன்ற பறவை இனங்களும் அருகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.நோய்களைக்கட்டுப்படுத்தி அதிக விளைச்சலை பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் இரசாயன பொருட்களை இன்று அதிகமாக பயன்படுத்துகின்ற போதும். ஒவ்வொரு போகபயிற்செய்கையின் போதும் புதியபுதிய நோய்கள் விவசாயத்தை பாதிக்கின்றன. எரிநோய், அடியழுகல், புழுக்குத்தல், அறக்கொட்டியான் என பல நோய்த்தாக்கத்துக்கும் உள்ளாகின்றது என்பதே கவலைக்குரிய விடயமாகும்.[Image]

எமது மூதாதையர்கள் காலத்தில் இயற்கை பசளைகளான மாட்டெரு, குட்டெரு, ஆட்டெரு, உக்கிய இலைகுளைகளையும். கிருமிநாசினிகளாக வேப்பம்மரபட்டையை காச்சி தெளித்தல். வேப்பங்கொட்டையை இடித்து தெளித்தல், கோமையம், கோசலம், பேன்றவற்றை தெளித்தல் இவ்வாறன இயற்கை வளங்களை பாவித்து உச்ச பயனை அடைந்தார்கள். ஆனால் இன்று இரசாயன பொருட்களை தராளமாக பயன்படுத்துகன்ற போதும் உச்ச பயனை அடையவில்லை என்பதே உண்மை. எனவே மிதமிஞ்சிய இரசாயன பாவனையினை குறைத்து இயற்கை பசளைகளையும், நாசினிகளையும் கலந்து நாம் விவசாயத்துக்கு பயன்படுத்தும் போது நாம் ஒர் உச்சக்கட்ட பயனை பெறலாம்.

No comments:

Post a Comment