My Blog List

Sunday, April 17, 2011

மூலிகைகளின் முக்கியத்துவம்

இன்றைய நூற்றாண்டில் மனிதனை  இயற்கை அனர்த்தங்கள் ஒரு பக்கம்  உயிர்களையும், சொத்துக்களையும் பெருவாரியான சேதத்தை ஏற்படுத்தியவண்ணம் உள்ளது. அத்துடன்  புதிய புதிய நோய்களும் மனிதனை நிர்க்கதியாக்கியுள்ளது. குறிப்பாக பண்டிக்காச்சல். எலிக்காச்சல், எயிட்ஸ் . மற்றும நீரிழிவு, புற்றுநோய், இன்னும் பற்பல நோய்கள்  மனித இனத்தை சோதனைக்கு உள்ளக்கியுள்ளது. மனிதன் தனது கண்டுபிடிப்புக்களால் பரினாம வளர்ச்சி  அடைந்தாலும் வளர்ச்சி அடைகின்ற ஒவ்வொரு காலகட்டத்திலும் சூழல் சமனிலையை சீர்குலைத்துக்கொண்டே முன்னேறிச் சென்றான். [Image]

இயற்கை சமநிலையை சீர்குலையாமல் பாதுகாத்துவந்த பெருமை காடுகளையே சாரும் மனிதன் ஆரம்பகாலங்களில் இருந்து இன்று வரை தனது தேவைக்காக  திட்டமிடப்பாடது காடுகளை அதிகமாக அழித்து வருகின்றான். குறிப்பாக உலக நாடுகளிலேயே அமேசன் காடுகளும் தென்கிழக்காசிய நாட்டுக்காடுகளுமே அதிகமாக அழிக்கப்பட்டு வருகின்றது. எடுத்துக்காட்டாக இந்தோனேசியாவில் கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2005 வரையான ஐந்தாண்டு காலப்பகுதியில் 45 இலட்சம் ஏக்கர் காடுகள் அழிந்துள்ளதாக ஆய்வுகள் கணக்கிடப்பட்டுள்ளது. இது ஆண்டுக்கு  2சதவீத காடுகள் அழிந்து வருவதற்கு சமன் என்று தெரிவிக்கப்படுகிறது.காடுகளை திட்டமிடப்பாது அழித்து வருகின்ற போது சூழலில் வெப்பநிலை அதிகரிப்பதுடன், மழைவிழ்ச்சி குறைகின்றது. அதுமட்டுமன்றி உயிர் பல்வகைமைகள் சீர்குழைக்கப்படுகின்றது. அத்துடன் மனிதனுக்கு ஏற்படுகின்ற நோய்கள் அனைத்துக்கும் வைத்தியத்துக்கு உதவும் மூலிகைசெடிகளும் இக்காடுகளிளேயே அதிகமாக காணப்படுகின்றது. சிலர் அறியாமையினால் மூலிகைச்செடிகளை அழிக்கின்றனர். சிலர் வெளிநாடுகளுக்கு கடத்துகின்றனர்குறிப்பாக  உலகில் இந்தியா , இலங்கை உட்பட 12 நாடுகளில் மட்டுமே அடர்ந்த வகை காடுகள் உள்ளன. இந்தியாவில் மேற்கு தொடர்பகுதி மலை, இமயமலை, அந்தமான் தீவு, நிக்கோபார்த்தீவு, மற்றும் இலங்கை, இந்தோனேசியா, பிறேசில் பகுதிகளில் அடர்ந்த காடுகள் உள்ளன. இந்த காடுகளில் 45 ஆயிரத்துக்கு மேற்பட்ட  தாவரங்கள் உள்ளன. காடுகளில் 34 சதவீதம் மரங்கள், மீதமுள்ள 66 சதவீதம், செடிகள், கொடிகள், பற்கள் மூலிகை தாவரங்களாக உள்ளன. உலக அளவில் மூலிகை ஏற்றுமதியில் சீனா முதலிடமும், இந்தியா இரண்டாம் இடமும் பெற்றுள்ளது. இவ்வாறு வகைதொகைஇன்றி  ஏற்றுமதி செய்யும் போது மருத்துவகுணம் கொண்ட அரிய மூலிகைச்செடிகள் முற்றாக அழிந்து விடும் ஆபாயம் உள்ளது என சுவிட்சா்லாந்தை சேர்ந்த சர்வதேச வனவியல் அறிஞர் ரெவன் எச்சரித்துள்ளார்.[Image]

அழிந்து வரும் வனவிலங்குளை, மரங்களை பாதுகாக்கும் சட்டங்கள் உள்ளன. ஆனால் மூலிகைகளை பாதுகாக்கும் சட்டங்கள் இல்லை எனவே கடத்தல்காரா்கள் தற்போது மூலிகைகளை வெளிநாட்டுகளுக்கு கடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய்களை சம்பாதித்து குவிக்கின்றனர். இதை தடுத்து மூலிகைகளை காப்பாற்ற தனிசட்ட வரைமுறை கொண்டு வர வேண்டும். அதன்பிறகு  மூலிகைகள் பாதுகாக்கப்படுவதுடன். விளைச்சலை பெருக்கி மருத்துவத்துறையிலும் பயன்படுத்தமுடியும்.[Image]

இன்று அழிந்து வரும் அரிய வகை மூலிகைகளாக, புதங்கலி, மரமஞ்சல், ஒருமுகருத்ராட்சம், அமரிதபாலா, சர்க்கரைக்கொல்லி, ஜானக்யா அரியல்பத்ரா, அரக்கபச்சை, ஸ்ரைக்கோபோஸ் கைலனிக்கா, க்னோகர்பஸ் மேக்னோகர்பா, கொலமாவு, கிங்ஜியோடென்ட்ரோம், பினோடெர்ம், சிறுபுழை, சங்குபுஸ்பம், உகில், குண்டுமணி, கற்றாலை, முடக்கத்தான், பெரண்டை உட்பட ஏராளமான அரியவகை மூலிகைகள் வேகமாக அழிந்து வருகின்றன.நமது புவியிலுள்ள அரும்பெரும் மூலிகைபாதுகாத்து அதன் உற்பத்தியை அதிகப்படுத்தி உலகில் மனிதனை கொண்றொழிக்கும் கொடிய நோய்க்கு உரிய மாற்று மருந்துகளை உற்பத்தி செய்யாமால். நாம் வேற்றுக்கிரகங்களில் ஆராச்சி செய்வதில் பயனேதும் ஏற்படபோவதில்லை இவ்வாறான் அசமந்த போக்கில் இருப்போமாயின் எதிர்காலம் எமனாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை.

No comments:

Post a Comment