My Blog List

Sunday, April 17, 2011

”போற்றி வணங்கு சூழலை”

பல நுாற்றாண்டு கால வரலாற்றை கொண்ட புவி இந்நூற்றாண்டின் ஆரம்பத்தின் தொடக்கத்தில்  இருந்து மிகப் பெரிய அழிவுக்குள் சென்று கொண்டு  இருக்கின்றது. என ஆரச்சியானர்களும், விஞ்ஞானிகளும் கூறிக்கொண்டே வருகின்றார்கள். உலக மனிதன் ஆராம்பத்தில்  இருந்தே படிப்படியாக வளர்ந்து இன்று சகல துறைகளிலும் பல்பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளான். ஆனால் ஆரம்பத்தில் மனிதன் படிப்படியாக வளரத்தொடங்கிய காலத்தில் இருந்து இயற்கையினை பெருவாரியாக அழித்துக்கொண்டெ தனது வளர்ச்சி கயணத்தினை மேற்கொண்டான். காலங்கள் போகப்போக இயற்கையின் செயற்பாடிட்டில் பெருமாறுதல் ஏற்படலாயிற்று.

மனிதன் கண்டுபிடித்த ஒவ்வொரு பொருட்களும் சூழலுக்கு பெரும் பாதகமாகவே அமைகின்றது. குறிப்பாக பெற்றோலிய வளத்தைக்கண்டுபிடித்து அதன் பயனால் பெருவாரியாக வாகன போக்குவரத்து அதிகமானது. தேவைகளை மிக விரைவாக செய்யக்கூடிகதாக இருந்தாலும், வாகணங்களில் இருந்து வெளிவரும் புகைமண்டலத்தால் சூழல் வெப்பநிலை அதிகரிப்பதுடன். சூழல் சம நிலை என்பது சடுதியான பாதிக்கப்படுகிறது.

அதுமட்டுமன்று மனிதனுடைய அறிவியல் வளர்ச்சியினால் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் பழுதுபடாமல் சிறிது காலத்துக்கு குளிரூட்டு பாதுகாப்பதந்காக குளிர்சாதனபெட்டியை கண்டுபிடித்தான் இவ்  குளிர்சாதன பெட்டியில் இருந்து குளோரோபுளோரோகபன் வாயு அதிகமாக வெளியேறியதால் அதன் தாக்கமோ மிகப்பாதகமானதாக அமைந்தது. இவ் வாயுவே சூரியனில் இருந்து வரும் உயர்ரினங்களுக்கு தீங்குவிளைவிக்கும் பிற ஊதாக்கதிர்களை புவி வந்தடைய வண்ணம் பாதுகாப்பாக அமைந்துள்ள ஓசோன் படலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக பாரிய சேதங்களை விளைவிக்கும் பிற ஊதாக்கதிர்கள் புவியைதாக்கின. இதன் விளைவாக வெப்பம் அதிகரித்தது, பனிப்பாறைகள் பெரு வாரியா உருகின, தாவரங்கள் பல  அழிந்து போயின. அதன் பின்புதான் குளோரோபுளோரோகபன் வெளிவராத குளிர்சாதன பெட்டிகளை மாற்றி அமைத்தனர்.

மேலும் கப்பல் உற்பத்தி, விமான உற்பத்தி, வாகன உற்பத்தி, மற்றும் இலத்திரனியல்  சாதனங்களின் உற்பத்தி என பல்வேறுபட்ட உற்பத்தி அதிவேகமா நடைபெற்று வருகின்றது. இதன் பயனால் மனிதன்  தன்னுடைய அன்றாட வாழ்க்கையை மிகவும் திருப்தியுடனும் சந்தோசத்துடனும் வாழ்ந்து வருகின்றான். குறிப்பாக ஓா் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு செல்லவோ, ஒருவருடன் தொடர்புகொள்ளவோ, உலகத்தில் எப்பாகத்தல் நடக்கும் புதிய புதிய தகவல்களை அறிந்து கொள்வதற்கோ, இயற்கை அழிவுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவோ முடிகிறது. அனால் அவற்றை உற்பத்தி செய்யும் போது வெளிவரும் கழிவுகளும், அவற்றை பயன்படுத்துகின்ற போது வெளிவரும் இரசாயன மாற்றுங்களும், அதன் பயன் முடிந்த பின்பு தேவையின்றி எறியும் போது ஏற்படும் பாதிப்பும் மிகக்கொடூராமானதாகவே அமைகின்றது.

மேற்குறிய விடயங்கள் மட்டுமன்றி மனிதன் இனப்பெருக்கமும், மனித தேவைகளும் அதிகரிக்க அதிகரிக்க திட்டமிடாத முறையில் காடுகளை பொருவாரியாக அழித்து வருகின்றான். காடுகளை அழிப்பதனால் இயற்கை சமநிலை பாதிக்கப்படுவதுடன். உயிர்பல்வகமைகளும் பாதிப்படைகின்றது. உலகில் இன்று அமேசன், ஆபிரிக்க காடுகள், தென்கிழக்காசிய நாடுகளிலும்  வா்த்தகத்துக்காக காடுகள் அதிகமாக அழிக்கப்பட்டு வருகின்றன. இவ் காடுகளை அழிப்பதனால் மழைவீழ்ச்சி குறைவதுடன், ஒட்சிசன் வாயு வீதம் குறைவதுடன். கபனீா்ரொட்சைட் வாயுவின் வீதம் அதிகரிக்கின்றது.

எனவே பல நூற்றாண்டு வரலாற்றைக்கொண்ட எம் புவித்தாயை தெய்வத்திற்குநிகராக  பேற்றி வணக்குவதுடன்நாம்ம்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகமேஎன்ற சான்றோர் வாக்குக்கு அமைய எமது எதிர்கால சந்ததியினருக் சுபிட்சமான சொர்க்க மாக புவியை விட்டுச்செல்வோம்.

No comments:

Post a Comment